Monday, July 25, 2011

சிங்கள இனம் அழியும் அபாயம்! இலங்கை பிரதமர் கவலை

Share

கொழும்பு: சிங்கள குடும்பங்களில் குறைந்த அளவில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது அதிகரித்து வருவதால் சிங்கள இனம் அழியும் அபாயம் உள்ளது' என, இலங்கை பிரதமர் ஜெயரத்னே தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடந்த புத்த மதக் கூட்டத்தில் கலந்து கொண்டு, இலங்கை பிரதமர் ஜெயரத்னே பேசியதாவது: கடந்த 60ம் ஆண்டுகளிலிருந்து சிங்கள மக்கள் தொகை குறைந்து வருவதாக சர்வதேச குடும்ப கட்டுப்பாடு அறிக்கை தெரிவித்துள்ளது. 60ம் ஆண்டுகளில் ஒவ்வொரு சிங்கள பெண்ணும், மூன்று குழந்தைகளுக்கு குறைவாகவே பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது.

தற்போது சிங்கள குடும்பங்களில், தற்போது யாரும் தங்கள் குழந்தைகளை புத்த துறவியாக்க முன்வருவதில்லை. வயதான காலத்தில் தங்களை கவனிக்க குழந்தைகள் இல்லாமல் போகும் என்ற நிலையால், அவர்கள் புத்த துறவிகளை உருவாக்குவதில்லை. பொருளாதார நிலை காரணமாக சிங்கள குடும்பத்தினர் அளவான குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர்.

ஆனால், தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பத்தினர், ஏழு முதல் எட்டு குழந்தைகளை தற்காலத்திலும் பெற்றுக் கொள்கின்றனர். சிங்கள குடும்பத்தினர் குறைவான குழந்தைகளை பெற்றால், எதிர்காலத்தில் சிங்கள இனம் அழியும் அபாயம் உள்ளது. இவ்வாறு ஜெயரத்னே பேசினார்.
Monday, July 25, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “சிங்கள இனம் அழியும் அபாயம்! இலங்கை பிரதமர் கவலை”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint