Monday, March 14, 2011

கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்!

Share






மேற்படி உடல் பருமன் மற்றும் தொப்பை போன்றவை எட்டி பார்த்த பின்னர்தான், சாப்பிடும் உணவு குறித்த விழிப்புணர்வே நம்மவர்களுக்கு எட்டி பார்க்கிறது.

அப்படியானவர்களுக்கான கொழுப்பைக் குறைக்கும் மற்றும் அதற்கு எதிராக போராடும் உணவு பட்டியல் இதோ:

ஓட்ஸ்:
உடல் மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் உணவு பட்டியலில் முதன்மையாக இடம்பெறுவது இது.நார்சத்து மிகுந்த இந்த ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும், சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது.



ஓட்ஸில் 'பீட்டா-குளூகான்'என்ற ஒருவகையான சிறப்பு நார்ச்சத்து அடங்கியுள்ளது. இந்த நார்சத்து நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க மிகவும் உதவுகிறது. அதே சமயம் நல்ல கொழுப்பின் அளவு மாறாமல் அப்படியே இருப்பதுதான் இதிலுள்ள தனி சிறப்பு.

இருதய நோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உலகம் முழுவதுமுள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே முழு தானிய உணவு இந்த ஓட்ஸ்தான்.

உடலில் மிக அதிக கொழுப்புடையவர்கள் கூட (220 மில்லி கிராமுக்கும் மேல்) நாளொன்றுக்கு வெறும் 3 கிராம் ஓட்ஸை - அதாவது ஒரு சிறிய கிண்ணம் அளவு - உட்கொண்டால் கூட அதிகப்படியான கொழுப்பு முற்றிலும் குறைந்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு ஓட்ஸ் நமது உடலில் மேஜிக் நடத்திவிடுகிறது.

சோயாபீன்ஸ்:


ஓட்ஸை போன்றே சோயா பீன்ஸும் பல்வேறு இருதயநோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைத்து,நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

பச்சை தேயிலை:

'கிரீன் டீ" எனப்படும் பச்சை தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீரை அருந்துவதால் கிடைக்கும் பலன்களை சொல்லிமாளாது. பச்சை தேயிலை தேநீர் மகா உசிதம்தான் என்றாலும், சாதா தேயிலை கொண்டு தயாரிக்கப்படும் பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத பிளாக் டீயிலும் பச்சை தேயிலையின் நற்குணங்கள் ஓரளவு அடங்கியுள்ளது. கெட்ட கொழுப்பை குறைப்பது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தம் உறைதல் போன்றவற்றிற்கு எதிராக செயல்படுவது போன்ற அற்புதங்களை இந்த பச்சை தேயிலை நிகழ்த்தி காட்டுகிறது.


மேலும் தேநீரில் 'ஃபோலிக் அசிட்' எனப்படும் உயிர்சத்தான ஃபோலிக் அமிலம் அடங்கியுள்ளது. இது இருதய நோய் மற்றும் புற்று நோய் ஆபத்தை குறைக்கிறது.நாளொன்றுக்கு ஒருவருக்கு தேவையான ஃபோலிக் அமில சத்தில் 25 விழுக்காடு, ஒருவர் தினமும் ஐந்து கப் தேநீர் அருந்தினால் கிடைக்குமாம்.

பார்லி( ஜவ்வரிசி):

பார்லி அல்லது ஜவ்வரிசி என்றழைப்படும் இதில் உடல் ஆரோக்கியத்தை பேணும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன.குறிப்பாக இருதயத்திற்கு இது மிகவும் நல்லது.கொழுப்பை எதிர்த்து போராடுவதில் ஓட்ஸை விட பார்லி அதிக திறன் வாய்ந்ததாம்.ஓட்ஸைப் போன்றே பார்லியிலும் 'பீட்டா குளூகோன்' என்ற நார்சத்து அடங்கியுள்ளது.மேலும் கல்லீரலுக்கு தேவையான வைட்டமின் 'டி'யும் இதில் உள்ளது.
Monday, March 14, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்!”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint