Monday, March 14, 2011

நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் ஆபத்து!

Share

ஒரஇடத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்ந்து இருப்பவர்கள், வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்கள், அதிகம் புகைப் பிடிப்பவர்களை காட்டிலும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்த வண்ணமே பணியாற்றிவிட்டு, வீட்டுக்குச் சென்றதும் தொடர்ந்து அங்கும் அமர்ந்த படியே டி.வி. பார்ப்பவர்களுக்கு இதய நோய், உடல் பருமன் அதிகரிப்பதுடன், தொப்பையும் ஏற்படும். இவர்களுக்கு 2-வது வகை சர்க்கரை நோய் வர அதிகம் வாய்ப்பு உள்ளது என மிசோரி பல்கலைக் கழக பேராசிரியர் மார்க் ஹேமில்டன் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்தாலும் அதே நாளில் தொடர்ந்து 22 மணி நேரம் உட்கார்ந்து இருந்ததை ஈடுசெய்ய இயலாது என்று ஆஸ்ட்ரேலியாவின் மெல்போர்னில் இயங்கி வரும் சர்வதேச நீரழிவு நோய் மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே தொடர்ந்து உட்கார்ந்த படியே வேலை செய்வதை தவிர்த்து இடையிடையே சிறிது நேரம் நடப்பது நல்லது எனவும், அவ்வாறு செய்வதால் இந்த நோய்கள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Monday, March 14, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் ஆபத்து!”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint