Monday, April 18, 2011

Actor SV Sekar has told that superstar Rajnikanth has committed 2 mistakes while casting his vote

Share


கும்பகோணம்: நடிகர் ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார். அனைவரையும் வைத்துக் கொண்டு வாக்குப் பதிவு செய்தது. வாக்குப் பதிவு செய்தவுடன் மாற்றம் தேவை என மக்கள் நினைப்பதாக கருத்து தெரிவித்தது இரண்டுமே தவறு என்று மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகர் கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து 19 பேரை தங்கபாலு நீக்கியதாக பத்திரிகையில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். எனக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான தன்னிலை விளக்கம் கேட்டு கடிதம் வரவில்லை. நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். நான் உள்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. இதுபோன்ற அதிகாரம் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு மட்டும்தான் உண்டு.

காங்கிரஸ் கட்சியில் இருந்து முதலில் நீக்கப்படவேண்டியவர் தங்கபாலுதான். மைலாப்பூர் தொகுதியில் கொல்லைப்புறம் வழியாக வந்து வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்ற பயத்தில்தான் காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல கோஷ்டிகளாக காங்கிரசார் செயல்படுகின்றனர் என்ற கருத்து நிலவி வரும் நிலையில் தங்கபாலு எங்களை நீக்கிய தன் மூலம் அனைத்து கோஷ்டியினைரையும் ஒற்றுமையாக செயல்பட வைத்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

தமிழக சட்டசபை தேர்தலில் 63 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பேன் என்று சீமான் கூறினார். அவரது ஆசையை நிறைவேற்ற தங்கபாலு தற்போது முயற்சிக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார். அனைவரையும் வைத்துக் கொண்டு வாக்குப் பதிவு செய்தது. வாக்குப் பதிவு செய்தவுடன், மாற்றம் தேவை என்று கருத்து தெரிவித்தது.

தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ இந்தக் கருத்தை அவர் தெரிவித்து இருக்கலாம்.
Monday, April 18, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Actor SV Sekar has told that superstar Rajnikanth has committed 2 mistakes while casting his vote”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint