Thursday, April 7, 2011

தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும் போராட்டம்: ராமதாஸ் திடீர் எச்சரிக்கை

Share

சேலம்: ""தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலாக வேண்டும் என்பதில், பா.ம.க., உறுதியாக உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என, ராமதாஸ் தெரிவித்தார்.

சேலத்தில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள வந்த ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: இத்தேர்தலில் தமிழகம் முழுவதும் அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்களின் அமோக ஆதரவு, கூட்டணி கட்சிகளின் பலம் ஆகியவை தான் ஓர் அணிக்கு வெற்றியை தேடி தரும். வாக்கு வங்கிகளை கொண்ட கட்சிகள் எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க., கூட்டணியில், அ.தி.மு.க.,வை தவிர்த்து வேறு எந்த ஒரு கட்சிக்கும் சீரான வாக்கு வங்கி இல்லை. விஜயகாந்த், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்ததால், தன் தனித்தன்மையை இழந்து விட்டார். அ.தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லை என்று நாங்கள் குற்றம் சாட்டிய பின்னரே, கோவையில் கூட்டம் நடத்துகின்றனர். ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருக்கவும் தகுதி இல்லாதவர். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

அதன் பின் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:


* தமிழ் மொழி மீது அக்கறை கொண்டுள்ளவர்களாக காட்டிக் கொள்ளும், தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவர்கள், தமிழ் பெண்களின் கற்பை அலட்சியப்படுத்தி பேசிய குஷ்புவை பிரசாரத்தில் பயன்படுத்துவதன் காரணம் என்ன?


தமிழ் பெண்களை பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். அது மட்டுமின்றி, அது குறித்து நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.


* பூரண மதுவிலக்கை வலியுறுத்தும் நீங்கள், தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், "டாஸ்மாக்' அகற்ற கோரி போராட்டம் நடத்துவீர்களா?


தமிழகத்தில் பா.ம.க., பூரண மதுவிலக்கு மேற்கொள்வதில் உறுதியாக உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

Thursday, April 7, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும் போராட்டம்: ராமதாஸ் திடீர் எச்சரிக்கை”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint