Monday, April 11, 2011

Vijay only said to me support AIADMK - SAC

Share

சென்னை: "அப்பா நாடு நல்லா இல்லை. எங்கும் அராஜகம். இனி சினிமாவை ஒதுக்கி வச்சிட்டு அரசியல் மாற்றத்துக்காக பாடுபடுங்கள்", என்று என் மகன் விஜய் சொன்னதால்தான் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்தேன் என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் கூறினார்.

கொளத்தூரில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து எஸ் ஏ சந்திரசேகரன் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

வன்முறை, அராஜகம், கொலை, கொள்ளை, ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றைப் பார்த்து கொதித்துப் போய்தான் விஜய் மக்கள் இயக்கம் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளது.

விஜய் என்னிடம், 'அப்பா, நாடு நல்லா இல்லை. விலைவாசி விண்ணை முட்டுகிறது. எங்கும் அராஜகம். நாடு நலம்பெற நீங்க சினிமாவை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு அரசியல் மாற்றத்துக்காக பாடுபடுங்கள்" என்றார். அவருடைய கட்டளையை ஏற்றுத்தான் நான் அவர் சார்பாக இங்கே வந்திருக்கிறேன்.

நடிகை குஷ்பு ஒரு வார இதழில், விஜய் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அந்த சகோதரிக்குப் புரியவில்லை. நானும் என் மகனும் வேறுவேறல்ல. அவர் அனுமதி இல்லாமல், அவர் சொல்லாமல் நான் இங்கு வரவில்லை.

இந்தக் கொள்ளையர்களை எதிர்த்து இளைஞர்களைத் திரட்டிப் போராட வந்திருக்கிறேன். எனக்கு இந்த வயதில் கோபம் வருகிறதே, இளைஞர்களே, உங்களுக்கு வரவில்லையா?

இறக்கும்போது வெறும் ரூ 150ஐ மட்டுமே வைத்திருந்த கர்ம வீரர் காமராஜரையோ, அண்ணாவையோ எதிர்த்து உங்களை போராடச் சொல்லவில்லை. 10 தொண்டர்கள் கூட இல்லாத காங்கிரஸ் தலைவர்களையும், வியாபாரக் கும்பலையும்தான் எதிர்த்துப் போராடச் சொல்கிறேன்.

கலைஞர் மூளையுள்ள முதலாளி. 1,92,00,000 இலவச டிவிக்களைக் கொடுத்ததாகச் சொல்கிறார். இதற்கு ஆன செலவு ரூ 3500 கோடி. இதனை மூன்று கேபிள் கனெக்ஷன் மூலம்தான் தமிழகத்தில் பார்க்க முடியும். ஒன்று அவரது பேரன்கள் நடத்தும் எஸ்ஸிவி. இன்னொன்று அவர் மகன் நடத்தும் ஜாக். மூன்றாவது அவரது இன்னொரு மகன் நடத்தும் ராயல். இந்த மூன்று கேபிள் நெட்வொர்க் ஒளிபரப்பினால் மட்டுமே நாம் அந்த இலவச டிவியில் பார்க்கமுடியும்.

இந்த கேபிள் இணைப்பு வழங்குவதன் மூலம் ரூ 15000 கோடியை அவர்கள் சம்பாதித்துள்ளனர். ஆக ஒரு பைசா முதலீடு இல்லாமல், மக்கள் பணத்தில் டிவி கொடுத்துவிட்டு, மக்களிடம் இவ்வளவு சம்பாதித்துள்ளது கலைஞர் குடும்பம். வியாபாரிகள் அரசியல்வாதிகளாக இருந்தால் நாடு என்னாகும்...

அடுத்து கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதாக கருணாநிதி அறிவித்துள்ளார். கல்லூரி மாணவர்கள் வயது 18-க்கு மேல். அதாவது ஓட்டுப் போடும் வயது. அவர்களின் ஓட்டுக்களைக் குறிவைத்து இதனை அறிவித்துள்ளார் கருணாநிதி. ஆனால் அம்மா அப்படி அல்ல. அவர்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கே லேப்டாப் தருவதாகக் கூறியுள்ளார். அம்மாவிடம் இருப்பது பொதுநலம்.

கள்ள ஓட்டுப் போட்டால் சிறைத்தண்டனை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் கருணாநிதிக்கு ஓட்டுப் போட்டால் அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்துக்கே தண்டனைதான். உலகக் கோப்பை இந்தியாவுக்கு , ஊழல் கோப்பை கருணாநிதிக்கு," என்றார்.
Monday, April 11, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Vijay only said to me support AIADMK - SAC”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint