Wednesday, June 15, 2011

Anushka & Naga Chaitanya - Love Marriage Engaged

Share





Naga Chaithanya & Anushka - Love Marriage.


Nagachaitanya anushka

Naga Chaitanya, the grand son of Rama Naidu and the son of Nagarjunas 1st wife. The guy took the features of Nagarjuna and many assume that he would be rocking the industry shortly. Anushka got close to him as per the Tollywood buzz a couple of years ago as his yoga teacher when he was in Bangalore with his friends


டோலிவுட்டில் நேற்று மாலை தொடங்கி பரபரப்பாக உலா வந்து கொண்டிருக்கிறது ஒரு செய்தி!

அனுஷ்காவுக்கும், பிரபல தெலுங்கு ஹீரோவும், சீனியர் ஹீரோவான நாகர்ஜூனாவின் வாரிசான நாக சைதன்யாவுக்கும்,

இருகுடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடந்தது முடிந்து விட்டது என்பதுதான் அந்த செய்தி.

அய்யோ! நான் காதலிப்பது உண்மைதான்னு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அனுஷ்கா தைரியமாக ஸ்டேட்மெண்ட் விட்டபோது.. அது வானம் பட இயக்குனர் கிரிஷ் என்றார்கள்.

“ நான் காதலித்து வருவது உண்மைதான். அவர் யார் என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை. என்னுடன் நடித்த பல தெலுங்கு ஹீரோக்களுடன் என்னை இணைத்து கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏன், ஐந்து ஹீரோக்களோடு திருமணமும் செய்து வைத்துவிட்டார்கள்.

அவை எல்லாம் வதந்திதான். ஆனால் நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் யாரென்று சொன்னால் பலரின் புருவங்கள் உயரலாம் என்பதால் அவர் பெயரை இப்போது சொல்ல விரும்பவில்லை.

அவரும் என்னை அளவுக்கு அதிகமாக காதலித்து வருகிறார். தற்போது அடுதடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களை முடித்துவிட்டு, இன்னும் இரண்டு வருடத்தில் எங்கள் திருமணம் நடக்கும்.”

என்றுதான் ஆறு மாதங்களுக்கு முன் அனுஷ்கா கூறியிருந்தார். ஆனால் இப்போது இரண்டு வருடம் காத்திருக்கும் பொறுமை இந்தஜோடிக்கு இல்லாமல் போய்விட்டது என்கிறார்கள்.

உண்மையில் அனுஷ்கா –கிரிஷ் காதலை உடைத்தது நாக சைதன்யாதான் என்கிறார்கள். மீடியாவின் தொல்லை தாங்காமல் இன்னும் சில தினங்களில் உத்தியோக பூர்வமாக இந்த ரசிய திருமண நிச்சயதார்த்தை அறிவித்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்கின்றன டோலிவு குருவிகள்.


----------------------------------------


நம்புவதா வேண்டாமா என குழப்பத்திலும் பரபரப்பிலும் திணறிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். காரணம்... தென்னிந்தியாவை தனது இடுப்பு மடிப்பில் சுருட்டி வைத்திருக்கும் கவர்ச்சி நாயகி அனுஷ்கா ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்ற செய்'தீ'தான்!

இவரைக் கல்யாணம் முடித்திருப்பவர் அக்கட பூமியின் காதல் மன்னனான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை!!

காதும் காதும் வைத்தமாதிரி, ஆனால் நாகார்ஜூன் - அமலா முன்னிலையில் நடந்துள்ளது இந்தத் நிச்சயதார்த்தம்.

மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த செய்தியை கோலிவுட்டின் பிரபல இளம் ஹீரோதான் (சிம்டபு) டமாரம் அடித்து பறைசாற்றி வருகிறாராம். இவர் அம்மணியுடன் சமீபத்தில் ஆட்டம் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை அமலா, ரஜினியுடன் தொடர்ந்து நடித்து டாப் கியரில் போய்க்கொண்டிருந்த போதுதான், திடுதிப்பென்று நாகார்ஜூனாவை திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.

அதே மாதிரி அனுஷ்கா முன்னணி நடிகையாக இருக்கும் போதே அவரை நிச்சயதார்த்தம் செய்துள்ளார் நாகார்ஜூனா - அமலா மகன் நாக சைதன்யா... திருமணத்தையாவது வெளியில் சொல்வார்களா?




Wednesday, June 15, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Anushka & Naga Chaitanya - Love Marriage Engaged”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint