Wednesday, June 1, 2011

செல்போன் அழைப்பு வரும் இடத்தைக் காட்டும் வசதி கட்டாயமாகிறது

Share


புது தில்லி, மே 31: செல்போன் அழைப்பு எந்த இடத்தில் இருந்து வருகிறது என்பதும் இனிமேல் செல்போனில் தெரியும். இந்த வசதியை இன்னும் 1 முதல் 3 ஆண்டுகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டுமென செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.÷பாதுகாப்பு காரணங்களுக்காவும், செல்போனில் தேவையின்றி வரும் தொந்தரவுகளைக் குறைக்கும் வகையிலும் இதனை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த வசதி வந்து விட்டால் செல்போன் மூலம் செய்யப்படும் குற்றங்கள் பெருமளவில் குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் நமது செல்போனுக்கு அழைப்பு வந்தால், அது எந்த இடத்தில் (எந்த ஊர்) இருந்து வருகிறது என்பதும் நமக்குத் தெரியும்.



LBS : எல்பிஎஸ் (லோக்கேஷன் பேஸ்டு சர்வீஸ்) எனப்படும் இந்த வசதியை அறிமுகப்படுத்த செல்போன் நிறுவனங்களுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் செல்போன் கட்டணங்கள் உயரக்கூடும்.
Wednesday, June 1, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “செல்போன் அழைப்பு வரும் இடத்தைக் காட்டும் வசதி கட்டாயமாகிறது”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint