Friday, July 29, 2011

Podinaayakkanoor Ganesan Review | Podinaayakkanoor Ganesan Movie Review | Podinaayakkanoor Ganesan Tamil Movie Review Tag l Podinaayakkanoor Ganesan

Share
Podi naayakkanoor Ganesan Review | Podinaayakkanoor Ganesan Movie Review | Podinaayakkanoor Ganesan Tamil Movie Review Tag l Podinaayakkanoor Ganesan Review,Podinaayakkanoor Ganesan Movie Review,Podinaayakkanoor Ganesan Tamil Movie Review
Podi Ganesan

Film: Podinaayakkanoor Ganesan
Music Director: John Peter
Song Writer:Nandhalala
Singers:
Velmurugan
Chinna Pon


கிராமத்து பண்ணையார் படிக்காத தனது மகனை கண்டிக்கிறார். அதோடு தன்னிடம் வேலை செய்யும் கணக்குப்பிள்ளையின் மகன் நன்றாக படிப்பதால் அவனுடன் ஒப்பிட்டு மகனை பேசுகிறார். இதனால் வெறுப்படையும் அவன் கணக்குப்பிள்ளை மகனை எதிரியாக கருதுகிறான்.



அதோடு அவனை கெட்டவனாக மாற்ற முயற்சிக்கிறான். இந்த சூழ்நிலையில் அப்பா சொத்துக்களை கோயிலுக்கு எழுதி வைக்கப்போக, அவரையே
கொலை செய்கிறான் மகன். ஆனால் அந்த பழியை கணக்குப்பிள்ளையின் மகன் மீது போட்டு அவனை ஜெயிலுக்கு அனுப்புகிறான். அதோடும் விடவில்லை ஜெயில் தண்டனை பெற்று திரும்பிய பிறகும் கணக்குப்பிள்ளையின் மகனை சமூக விரோத செயல்களில் ஈடுபட வைத்து தனது கைப்பாவையாக நடத்துகிறான். ஆனால் ஒரு கட்டத்தில் மனநிலை சரியில்லாத தனது தம்பியையே அவன் கொன்று விட, அவனை ஹீரோ பழிவாங்குவதுதான்
போடி நாயக்கனூர் கணேசன் கதை.



ஆரம்பத்தில் சஸ்பென்சாக செல்லும் கதையில், பிளாஸ்பேக் வரும்போது ஓரளவு விறுவிறுப்பு தெரிகிறது. என்றாலும் காட்சிகள் ஏற்கனவே நிறைய படங்களில் பார்த்தது போன்றே இருப்பதால் படம் தொடங்கிய ஒரு 15 நிமிடத்திலேயே போர் அடிக்கிறது. அவ்வப்போது ஒரு பாடல் இளையராஜா ஸ்டைலில் வந்து கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. கதையிலும், காட்சிகளிலும் பெரிதாக சுவராஸ்யம் எதுவும் இல்லை.


ஹரிகுமார், சூரி இருவரும் அவ்வப்போது காமெடிக்கு முயற்சித்த்ாலும் அது சிரிக்கிற அளவுக்கு இில்லை. காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் என்று மூன்றையும் கலந்து கொடுத்திருக்கும் இயக்குனர் ஓ.ஞானம் வழக்கமான கதை என்றாலும் இன்னும் லேட்டஸ்டாக வெளிப்படுத்தியிருக்கலாம். ஜான்பீட்டர் பாடல்கள் பழைய ரகம் என்றாலும் கேட்க இனிமையாக உள்ளது. பின்னணி இசையில் சபாஷ் வாங்குகிறார்.


வெளுத்துக்கட்டு அருந்ததிக்கு நல்ல வேடம்தான். ஆனால் அவர் பர்பாமென்ஸை வெளிப்படுத்த காட்சிகள் இல்லை. பொம்மையாட்டம்தான் வந்து செல்கிறார்.மொத்தத்தில் போடி நாயக்கனூர் கணேசன் படத்தின் இயக்குனர் ஞானம் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.


போடி நாயக்கனூர் கணேசன்- பழைய கஞ்சி.








Friday, July 29, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Podinaayakkanoor Ganesan Review | Podinaayakkanoor Ganesan Movie Review | Podinaayakkanoor Ganesan Tamil Movie Review Tag l Podinaayakkanoor Ganesan”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint