Tuesday, August 23, 2011
இந்திய உளவாளி நகைமுகன் நாடுகடந்த தமிழீழ அரசை இந்தியாவிடம் சிக்க வைக்க முயற்சி
இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகள் வருகின்ற மாதம் 30 ஆம் திகதி ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர் இதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி ஒருவர் தொடக்கி வைக்கிறார் என்று இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகள் அறிவித்துள்ளனர் . ஆனால் நாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமைமைய உறுபினர்களை கேட்ட பொழுது எமக்கும் இந்த மாநாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டனர் .
தற்போது புலத்தில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதி நிதிகளை தொடர்புகொண்டு நாம் நாம் தமிழர் இயக்க ஏற்பாட்டில் தான் நடத்துகின்றோம் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் . அதே நபர் கனடாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதி நிதியை தொடர்பு கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்திக்கு பொறுப்பாக இருக்கும் சரஸ்வதி அம்மா ஒரு தெலுங்கர்அவரை மாற்றவேண்டும் என்றும் குறிபிட்டுள்ளார். இந்த மாநாட்டை நடத்துபவர்கள் யார் இவர்களின் குறிக்கோள் என்ன என்பதை பற்றி கிழே உள்ள செய்தி தொகுப்பில் இணைத்துள்ளோம் . இவர்கள் நடத்தும் மாநாட்டுக்கும் எமக்கும் எந்த தொடர்பு இல்லை என்று உடனடியாக மறுப்பு அறிக்கை விடுபம்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நாம் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் .
கொழும்பு அரசத்தலைவர் மகிந்தா கைகளுக்கு வந்த பின்பு, எல்லாவற்றிலும் தமிழருக்கு எதிரான “சதி” என்பது நாளொரு வண்ணமும் அரங்கேறி வருகிறது. அதில் ” டக்லஸ் தேவானந்தாவை” மெல்ல,மெல்ல தனது வலைக்குள் இழுத்து, கடைசியில் “தேவானந்தா” தனது ஈ.பி.டி.பி சின்னத்தில் கூட நிற்கவிடாமல்,, ராஜபக்சேவின் “வெற்றிலை” சின்னத்தில் நிற்கவைத்த “தந்திரம்” மகிந்தாவின் வெற்றியாக சிங்களவெறியர்களால் கருதப்படுகிறது. “துரோகி கருணாவை” முழுமையாக தனது கட்சியுடன் இணையவைத்ததில் மஹிந்தாவென்றதாக அதே சிங்கள இன வெறியர்கள் கூறிவருகிறார்கள்.புலிகளை “நாகப்பாம்பு” என்றும் அதை அழித்து விட்டதாகவும், இனி “சாரைப்பம்புகளை” அழித்திவிடலாம் என்றும் சிங்கள வெறியர்களான மகிந்தா கும்பல் கூறிவருகிறது. அவர்களது அடுத்த “களம்” இந்தியாவிற்குள் இருக்கும் ” ராஜபக்சே எதிர்ப்பாளர்களை” அழிப்பதுதான் என்றும் கூறுகிறார்கள். அதற்கு தங்களுக்கு இந்திய அரசின் “உளவுத் துறையினர்” முழுமையாக் உதவி வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
அப்படி இந்தியாவில் “சதி வேலைகளை” செய்ய சில “தமிழ்நாட்டு ஆட்களை” இந்திய நடுவண் அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த “தமிழ்நாட்டு ஆட்கள்” பட்டியல் இப்போது கிடைத்துள்ளது. அவர்களில் முதன்மையாக “நகைமுகன்” வருகிறார். அவர் முதலில் ” நடுவண் அரசின் அதிகாரி”யாக இருந்தார். அதை ராசினாமா செய்துவிட்டு, சாராய உடையார் என்று புகழ் பெற்ற ராமசாமி உடையார் நடத்திய நிறுவனத்தில் மேலாளராக இருந்தார். அப்போது ” நமது நிருபர்” என்ற வார ஏட்டை, “நெப்போலியன் பால்ராஜ்” என்பவர் நடத்தி வந்தார். அது 1989 ஆம் ஆண்டு. அந்த இதழில் “நகை முகன்” நண்பராக இருந்துவந்தார். அவ்வப்போது எழுதியும் வந்தார். அப்போது திமுக அரசு கருணாநிதி தலைமையில் நடந்து வந்தது. அந்த அரசை கலைக்க நாடவன் அரசில் இருந்த காங்கிரஸ் நினைத்தது. நெப்போலியன் பால்ராஜ் வசம் ” அசாம் மாநில” போராளிகள் என்று சிலர் வந்து தங்கி இருந்தனர். அவர்களை “உல்பா” தீவிரவாதிகள் என்று அவர்கள் அழைத்துக் கொண்டார்கள். அந்த “உல்பா” தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது திமுக அரசு என்று ” பெரிய எழுத்துகளில் ” தங்களது இதழில் “நகைமுகன்” அச்சடித்து வெளியிட்டார். அதைவைத்து திமுக அரசை “கலைக்கவேண்டும்” என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். அதேபோல நடுவன் அரசு கருணாநிதி அரசை கலைத்தது. கருணாநிதி அப்போது” நகைமுகனை” அடையாளம் கண்டு அவர் “ஐ.பி. ஒற்றர்” என்று அறிவித்தார். அதாவது நாடவன் அரசு நடத்தும் உளவு நிறுவனத்துக்கு “ஐ.பி.” என்று பெயர். அதன் விளக்கம் ” உளவுத் துறை” என்பதே.அப்போதிலிருந்து “நகைமுகன்” ஐ.பி. காரர்களுக்கு விசுவாசமாக இருந்து கொண்டே பல “கட்டை பஞ்சாயத்துகளை செய்து வந்தார்.
1991 இல் ராஜிவ்காந்தி கொலைக்கு பிறகு,பலரும் தமிழ்நாட்டில் குற்றம் சாட்டப்பட்ட போது, திராவிடர் கழகத்தில் அப்போது இருந்த “பாலகுரு” என்பவரும் “ஜெயின் ஆணையம்” கொடுத்த அறிக்கையில் அவரது பெயர் இருந்ததை வைத்து, நாடவன் அரசின் உளவுத் துறையினர் கொடுத்த அழுத்தத்தில் அவர்களுக்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அவர் “பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்ததும், அதில் ஒரு தொண்டர் கொலை செய்யப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்டதும், அங்கிருந்து வெளியேறினார் என்பதும்” தனிக் கதை. 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் ஒரு ‘போர் நிறுத்தம்” புலிகளால் அறிவிக்கப்பட்டு இரண்டாண்டு கழித்து சிங்களத்தால் ஏற்கப்பட்டு கையெழுத்தான நிலையில், தமிழகத்தில் இருந்து பலரும் ஈழம் சென்று வந்தனர்.அப்படி சென்றதில் ஒருவர் “தமிழா, தமிழா பாண்டியன்” என்ற ஊடகக்காரர். இப்போது 2010 ஆம் ஆண்டு மகிந்தாவின் உளவுத்துறையும், இந்திய உளவுத் துறையும், ஒரு திட்டமிட்டது. அதில் “கருணா மூலம் சரணடைந்த கேணல் ராம் குழுவினரை” பயன்படுத்தி அவர்கள் அடுத்த “ஆயுதப் போராட்டத்திற்கு” தயார் செய்வதாக ஒரு “கட்டுக் கதையை” பரப்ப எண்ணினார்கள்.
அதற்காக இந்தியாவிலிருந்து சிலர் இலங்கை வரவேண்டும் என்றும், அவர்கள் “கேணல் ராம் குழுவினரை” சந்தித்ததாக பரப்புரை செய்யவேண்டும் எனவும் திட்டமிட்டனர். அதற்கு இந்திய உளுத் துறையினர், “பாலகுருவையும், தமிழா, தமிழா பாண்டியனையும், நகைமுகனையும்” அனுப்பி வைத்தனர். அவர்கள் சென்று வந்ததை ” ஹம்சாநண்பர்” ஜாபர் சேட் மூலம் “நக்கீரன்” இதழில் வெளியிட வைத்தனர்.அதன்மூலம் “பிரபாகரன் இறந்துவிட்டார் எனவும், ராமு ஆயுதப்போராட்டத்தை நடத்துகிறார்” எனவும் ஒரு கருத்தை பரப்ப இரண்டு நாட்டு உளவுத் துறைகளும் திட்டமிட்டன. அதில் அவர்களுக்கு பல வகைகளில் பிளான் உண்டு என்றும் கூறினர். அடுத்து “பாலகுரு மூலம்” போர் நடக்கும் சூழலிலேயே ஒரு மாணவர் பேரவையை ஏற்படுத்தி அதன்மூலம் “தமிழ்நாட்டில் ஈழப் பிரச்னைக்கு” போராடும் அமைப்பாக தனைகளை காட்டிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது “இந்து மத வெறியர்களை” நம்பி மட்டுமே ஈழத் தமிழர் பிரச்னையை அகில இந்திய அளவில் எடுக்க முடியும் என்று பரப்பி அதன்மூலம், “முஸ்லிம்கள்” தமிழர்களுக்கு ஆதரவாக வருவதையும், “கிறித்துவர்கள்” தங்களையும் தமிழர்களாக கருதி வருவதையும் உடைக்க இரண்டு அரசுகளும் “சதி” செய்வதாக தெரிகிறது. சிங்களம் ஏற்கனவே தனது “சாதியின் மூலம்” தமிழ் பேசும் முஸ்லிம்களை ஈழத் தமிழர்களுக்கு எதிராக ” நிறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளதால், அதையே இப்போது இந்தியாவில் பயன்படுத்த சொல்லி உலவுத்துறைகளுக்குள் பேசி, முடிவு செய்துளார்கள். அதுவே அங்கு இப்போது அமுலாகிவருகிறது. அதில் சமீபத்தில் பெங்களூரில் ஒரு மாநாட்டை கூட்டி அதில், கர்நாடக சிறிராம் சேனாவின் பிரமோத் முத்தாலிக் தலைமையில் செயல்பட முடிவு செய்துள்ளனர். இதுவும் உளவுத்துறைகளின் ஏற்பாடே. அதில் மேற்கண்ட ஒவ்வொரு நபர்களும் இறங்கி பணியாற்ற உளவுகள் பணித்துள்ளன.
தொடரும்-
If you loved this post
This post was written by: deivam P Mohanraj
deivam P Mohanraj is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
0 Responses to “இந்திய உளவாளி நகைமுகன் நாடுகடந்த தமிழீழ அரசை இந்தியாவிடம் சிக்க வைக்க முயற்சி”
Post a Comment