Friday, June 3, 2011

Dayanidhi Maran 2g Scam : In Full Detail

Share

Tamil Nadu DMK MP - Dayanidhi Maran 2g Scam : In Full Detail

சென்னை, ஜூன் 2:மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது தனது குடும்ப வியாபார நலனுக்காக 323 தொலைபேசி இணைப்புகள் கொண்ட ஒரு தொலைபேசி இணைப்பகத்தையே முறைகேடாக தன்னுடைய வீட்டில் செயல்பட வைத்தார் என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித் திருப்பதாக கூறப்படுகிறது.
.
இதன் மூலம் தயாநிதி மாறனால் அரசுக்கு ரூ.440 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ கூறியிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருக்கும் தயாநிதி மாறன் இதற்கு முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது செய்ததாக கூறப்படும் முறைகேடு குறித்து சிபிஐ விசா ரணை நடத்தியது.அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது 323 தொலைபேசிகளை தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கூறி யுள்ளார். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல.

சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்பட்டு உள்ளன.இந்த தொலைபேசி இணைப்புகள் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன் படுத்தப் பட்டு உள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு பொது வீதியில் ரகசியமாக கேபிள்கள் பதிக்கப் பட்டுள்ளன.வீட்டிலிருந்து குடும்பத்தின் வர்த்தக நிறுவனத்திற்கு இணைப்பு தரப் பட்டிருக்கிறது என்று விசாரணை அறிக்கையில் சிபிஐ தெரிவித் திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த 323 தொலைபேசி இணைப்பு களையும் சென்னையில் தான் வசித்த போர்ட் கிளப் சாலை வீட்டில் இருந்து அண்ணாசாலையில் அண்ணா அறிவாலயத்தில் இருந்த சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட் டுக்காக தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்பு கேபிள்களை பதித்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய வீட்டுடனான இந்த 323 தொலைபேசி இணைப்புகளை யும் தன் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி களை ஒளிபரப்புவதற்கு பயன்படுத் திக்கொண்டிருப்பதாகவும் சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த 323 தொலைபேசி இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தை சேர்ந்தவையாக செயல்பட்டன. 2007ம் ஆண்டு ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத் துக்காக பயன்படுத்தப்பட்டன. இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல. விலை மதிப் புள்ள ஐஎஸ்டிஎன் இணைப்புகளை கொண்டவை. செயற்கைகோள்களை விட
அதிக விரைவாக உலகின் எந்த பகுதியில் இருந்தும் எந்த பகுதிக்கும் செய்திகளையும், படங்களையும் வீடியோ காட்சிகளையும் நொடிப் பொழுதில் கொண்டுபோய் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகள் என்றும் சிபிஐ அறிக்கை தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.



இந்த இணைப்புகளை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக் கான ரூபாய்களை செலவிட வேண்டி இருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் முறைகேடான செயல்பாடு காரணமாக இவை அனைத்தும் ஒரு பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டன.

இது அமைச்சரின் சொந்த உபயோ கத்திற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட தொலைபேசி இணைப்புகள். இதனை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாத வகையில் மிகமிக ரகசிய மாக வைக்கப்பட்டிருந்தது எனவும் சிபிஐ அறிக்கை குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பையும் சிபிஐ தனது அறிக்கையில் மதிப்பீடு செய்து தெரிவித்துள்ளது. ஒரு தொலைபேசி மூலம் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்கு பயன்படுத்தப்பட்டிருக் கிறது. அதாவது ஒரே ஒரு தொலை பேசி மூலம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. அப்படி யானால் 323 இணைப்புகளுக்கும் சேர்த்து அவற்றின் வாயிலாக பல கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப் பட்டு உள்ளன.


2007ம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டிற்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பிஎஸ்என்எல்க்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ தனது அறிக்கையில் கூறியிருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
Friday, June 3, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Dayanidhi Maran 2g Scam : In Full Detail”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint